நான் ஆன்ட்டியா?: ரசிகருக்கு நடிகை ஷெரின் பதிலடி!

நான் ஆன்ட்டியா?: ரசிகருக்கு நடிகை ஷெரின் பதிலடி!

சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதிலடித்து அளித்துள்ளார் ஷெரின்.

சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதிலடித்து அளித்துள்ளார் ஷெரின்.

பெங்களூரைச் சேர்ந்த ஷெரின், 2002-ல் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார், கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் புகழை அடைந்தார்.

சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் தன்னுடைய படம் ஒன்றைப் பதிவேற்றினார் ஷெரின். அதைக் கண்ட ரசிகர் ஒருவர், பிக் பாஸில் நுழைந்தபோது நீங்கள் நடுத்தர வயது ஆண்ட்டி போல இருந்தீர்கள். ஆனால் அப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன். உங்களுக்கு நாளுக்கு நாள் இளமை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது என்று எழுதினார்.

இதற்குப் பதிலளித்த ஷெரின், ஆமாம்... தோற்றத்தைக் கொண்டு மனவேதனையைத் தரும்படியான எதிர்வினைகளைப் பலரும் தருகிறார்கள். நாம் மேலோட்டமான உலகில் வாழ்கிறோம் என்பதை இது நிரூபிக்கிறது. சுய அன்பும் சுய அங்கீகாரமும் நம் வாழ்க்கைக்கு அவசியம் என்கிற கருத்தாக்கத்தை இது உறுதிபடுத்துகிறது என்று பதில் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com