நீதிமன்ற உத்தரவு எதிரொலி: அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம்

உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் ஒன்று, அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்டது.      
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சென்னை: உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் ஒன்று, அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்டது.      

சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் “ஹீரோ”. இந்த படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குனர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ பிரபு என்பவர் ‘ஹீரோ’ திரைப்படத்தின் கதை அவருடையது என்று புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மீது திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் விசாரணை நடத்தினார். அப்போது போஸ்கோ பிரபுவின் கதை, ‘ஹீரோ’ திரைப்படத்தின் கதையை ஒத்து இருப்பதால், திரைப்பட இயக்குநர் பிஎஸ் மித்ரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் தனது கதை குறித்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த, பிஎஸ் மித்ரன் இந்த அழைப்பை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் திரைப்படத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ஹீரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவையடுத்து ஹீரோ திரைப்படம் அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்டது.  

திரையரங்குகளில் வெளியான ஹீரோ திரைப்படம் போதிய வரவேற்பை பெறாத நிலையில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. அத்துடன் ஒ.டி.டி தளமான அமேசான் பிரைமில் வெளியானது.  

ஆனால் இந்த வழக்கில் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயக்குநர் பிஎஸ் மித்ரனுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் சாட்டிலைட் தொலைக்காட்சி மற்றும் ஓ டி டி தளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து ஹீரோ திரைப்படம் அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com