பாலிவுட் நடிகைக்கு கரோனா

இந்தியாவின் சூப்பர் மாடல்களில் ஒருவராக நடாஷா அறியப்படுகிறார். 
பாலிவுட் நடிகைக்கு கரோனா

பாலிவுட் நடிகை நடாஷா சுரி, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

2006-ல் மிஸ் வேர்ல்ட் இந்தியா பட்டம் வென்றவர் நடாஷா. உலக அழகிக்கான போட்டியில் முதல் 10 இடங்களைப் பிடித்தார். இந்தியாவின் சூப்பர் மாடல்களில் ஒருவராக நடாஷா அறியப்படுகிறார். 

2016-ல் வெளியான கிங் லையர் என்கிற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். மேலும் சில ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். கரண் சிங், பிபாசா பாசுவுடன் இணைந்து டேஞ்சரஸ் என்கிற இணையத் தொடரில் நடித்துள்ளார். அத்தொடர் ஆகஸ்ட் 14 முதல் எம்.எக்ஸ். பிளேயர் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகை நடாஷா, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

ஆகஸ்ட் 1 அன்று அவசர வேலையாக புணேவுக்குச் சென்றேன். அங்குதான் எனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். அந்த வைரஸை என் சகோதரிக்கும் என் பாட்டிக்கும் கடத்திவிட்டேன். நல்ல விஷயம் என்னவென்றாலும் அனைவரும் உடல்நலன் தேறிவருகிறோம். டேஞ்சரஸ் தொடரின் விளம்பரப் பணிகளில் இதனால் என்னால் ஈடுபட முடியாது என்பதால் வருத்தத்தில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com