சஞ்சய் தத் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மனைவி கோரிக்கை

சஞ்சய் தத் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவருடைய மனைவி...
சஞ்சய் தத் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மனைவி கோரிக்கை

சஞ்சய் தத் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவருடைய மனைவி மான்யதா கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஞ்சய் தத்துக்குக் கடந்த சனிக்கிழமை மாலை மூச்சுத்திணறலும் லேசான நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் உதவியால் ஓரிரு நாள்களில் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன் என்று தகவல் தெரிவித்தார் 61 வயது சஞ்சய் தத்.

பிறகு கடந்த திங்கள் அன்று மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினார். 

இந்நிலையில் நுரையீரல் புற்றுநோயால் சஞ்சய் தத் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்பட நிபுணர் கோமல் நடா ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: 

நுரையீரல் புற்றுநோயால் சஞ்சய் தத் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று ட்வீட் செய்துள்ளார்.

இதையடுத்து சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்கிறார் சஞ்சய் தத். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து சஞ்சய் தத் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில் சஞ்சய் தத் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவருடைய மனைவி மான்யதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

சஞ்சய் தத் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இந்தக் காலக்கட்டத்தைக் கடக்க மன வலிமையும் பிரார்த்தனைகளும் தேவை. கடந்த சில வருடங்களில் ஏராளமானவற்றை எதிர்கொண்டுள்ளோம். இதுவும் கடந்து போகும் என நம்பிக்கையாக உள்ளேன். 

ஊகங்களையும் தேவையில்லாத வதந்திகளையும் ரசிகர்கள் நம்பவேண்டாம். உங்கள் அன்பையும் ஆதரவையும் எங்களுக்கு வழங்குங்கள். சஞ்சய் தத் ஒரு போராளி. நாங்களும் தான். சவால்களை எதிர்கொள்ள மீண்டும் கடவுள் எங்களைத் தேர்வு செய்துள்ளார். உங்களுடைய பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எப்போதும் போல இந்தச் சவாலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com