
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள பாவக்கதைகள் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதனால் திரையரங்குகளில் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இல்லாமல் இருந்தது. கரோனாவால் திரைப்படத் துறையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில், சினிமாவின் மாற்றுத் தளமாக ‘ஓடிடி’ அமைந்திருக்கிறது. சினிமா ரசிகர்கள் வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி, இணையம் வழியாக படங்களைப் பார்த்து வருகிறார்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன.
நெட்பிளிக்ஸ், அமேசான் ஓடிடி தளங்களில் பல்வேறு புதிய படங்கள் பல இயக்குநர்களின் கூட்டணியுடன் வெளிவருகின்றன.
சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், கெளதம் மேனன் என நான்கு இயக்குநர்கள் ஒன்றிணைந்து பாவக்கதைகள் என்றொரு படத்தை இயக்கியுள்ளார்கள். இப்படத்தில் நான்கு கதைகள் உள்ளன.
பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, அஞ்சலி, சிம்ரன், பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், ஷாந்தனு பாக்யராஜ், கல்கி போன்றோர் பாவக் கதைகள் படத்தில் நடித்துள்ளார்கள்.
பாவக்கதைகள், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 அன்று வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...