சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' வெளியீடு!

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' திங்களன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' திங்களன்று வெளியிடப்பட்டுள்ளது.

'இன்று நேற்று நாளை' திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். அவரது முதல் படத்தைப் போலவே இதுவும் ஒரு அறிவியல் கதை என்று சொல்லப்பட்டது. சிவகார்திகேயனின்நெருங்கிய நண்பரான ராஜாவின் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்றவுடன் ரசிகர்களுக்கு கூடுதல்  ஈர்ப்பு ஏற்பட்டது. அதேபோல் ஒளிப்பதிவை  நீரவ் ஷா கவனித்துக் கொள்கிறார்

ஆனால் இடையில் சிவகார்த்திகேயன் நடித்த சிலபடங்கள் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த காரணத்தால் இந்தப் படம் தொடர்வதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவற்றை எல்லாம் களைந்து படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடஙகியது.

முன்னதாக படத்தின் தலைப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இம்மாதம் 3-ஆம் தேதி வெளியிட்டுள்ளார். படத்திற்கு அயலான் என்று பெயரிட்டுள்ளனர்.    

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' திங்களன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com