பிக் பாஸ் இறுதிச்சுற்றில் முறைகேடா?: தொலைக்காட்சி நிறுவனம் விளக்கம்

கலர்ஸ் தொலைக்காட்சியின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்...
பிக் பாஸ் இறுதிச்சுற்றில் முறைகேடா?: தொலைக்காட்சி நிறுவனம் விளக்கம்

ஹிந்தி பிக் பாஸ் 13 தொலைக்காட்சி நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை இந்த வருடமும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் 13 நிகழ்ச்சியை நடிகர் சித்தார்த் சுக்லா வென்றுள்ளார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாடலிங்கில் ஈடுபடும் அசிம் ரியாஸ் 2- ம் இடத்தைப் பிடித்தார். ஹிந்தி பிக் பாஸ் 13 பட்டத்தை வெல்ல ஆர்த்தி சிங், அசிம் ரியாஸ், ரஷமி தேசாய், பராஸ் சாப்ரா, ஷெனாஸ் கில், சித்தார்த் சுக்லா என 6 பேர் போட்டியிட்டார்கள். ரூ. 40 லட்சத்தைப் பரிசுத்தொகையாகப் பெற்றார் சித்தார்த் சுக்லா. 

எனினும் கலர்ஸ் தொலைக்காட்சியின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இறுதிச்சுற்றில் மோசடி நடந்துள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் பலரும் குற்றம் சாட்டினார்கள். 

ட்விட்டரில், ஃபெரிஹா என்றொரு பெண், பிக் பாஸ் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலர்ஸ் தொலைக்காட்சியிலிருந்து விலகியதாகக் கூறி சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தினார். குறைந்த வாக்குகள் பெற்றும் சித்தார்த் சுக்லாவை வெற்றி பெற வைக்கவே கலர்ஸ் தொலைக்காட்சி விரும்பியது. என்னால் பிக்ஸிங் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தொடர முடியாது.  எனவே கலர்ஸ் தொலைக்காட்சியிலிருந்து விலகியுள்ளேன் என்று ட்வீட் செய்தார். இதையடுத்து சர்ச்சை மேலும் அதிகமானது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று சர்ச்சை குறித்து கலர்ஸ் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஃபெரிஹா என்பவர் கலர்ஸ் தொலைக்காட்சியிலோ அல்லது எங்களுடன் எவ்விதத்திலும் பணியாற்றவில்லை. எங்கள் தொலைக்காட்சிக்கு எதிராக அவர் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை. அதிகாரபூர்வமற்ற தரப்பிலிருந்து வரும் எவ்விதத் தகவல்களையும் ரசிகர்கள் நம்பவேண்டாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்குப் பிறகும் ஃபெரிஹா தொடர்ந்து கலர்ஸ் தொலைக்காட்சி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை தனது ட்விட்டர் கணக்கு வழியாகத் தெரிவித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com