கொஞ்சமாக ஆசைப்படுங்கள்: தர்பார் தெலுங்குப் பட விழாவில் ரஜினி பேச்சு

என்னுடைய சுறுசுறுப்புக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம் இவைதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக வருத்தப்படுங்கள், கொஞ்சமாகச் சாப்பிடுங்கள்...
கொஞ்சமாக ஆசைப்படுங்கள்: தர்பார் தெலுங்குப் பட விழாவில் ரஜினி பேச்சு

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.

ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. தர்பார் படம் ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது. தர்பார் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 2.39 மணி நேரம் படத்தின் கால அளவு என தணிக்கைச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தர்பார் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கான நிகழ்ச்சி ஒன்று ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கில் பேசினார் ரஜினி.  அவர் பேசியதாவது: 

என்னுடைய சுறுசுறுப்புக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம் இவைதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக வருத்தப்படுங்கள், கொஞ்சமாகச் சாப்பிடுங்கள், கொஞ்சமாகத் தூங்குங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாகப் பேசுங்கள். இதை எல்லாம் செய்தால் சந்தோஷமாக வாழலாம். 1976-ல் Anthuleni Katha (அவள் ஒரு தொடர்கதை) தெலுங்கில் வெளியானபோது இங்குள்ள பலரும் பிறந்திருக்க மாட்டீர்கள். தெலுங்கு மக்கள் தமிழ் மக்களுக்கு இணையாக என்னை நேசிக்கிறார்கள். தெலுங்கில் என் படங்கள் நன்றாக ஓடியதற்கு நான் மட்டும் காரணமல்ல. ஒரு படம் உருவாகும்போது மேஜிக் நிகழவேண்டும். அது நம் கையில் இல்லை. தர்பார் பட உருவாக்கத்தின்போது அந்த மேஜிக் நிகழ்ந்தது. முருகதாஸுடன் இணைந்து படம் பண்ணவேண்டும் என்று நீண்ட நாள்களாகக் காத்திருந்தேன். இப்போதுதான் அது நடந்துள்ளது என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com