கோல்டன் க்ளோப் விருதுகளின் மொத்த பட்டியல்

ஃபாரின் ப்ரெஸ் அஸோசியேஷன் அமைப்பினரால் 1944 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் “கோல்டன் க்ளோப்” விருது.
Golden Globes 2020
Golden Globes 2020

ஃபாரின் ப்ரெஸ் அஸோசியேஷன் அமைப்பினரால் 1944 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் “கோல்டன் க்ளோப்” விருது.  ஆண்டு முழுவதும் அமெரிக்காவில் வெளியாகும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்காக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

இயக்கம், நடிப்பு, இசை உள்ளிட்ட வரையறையின் அடிப்படையில்  சிறந்த ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் திரைக்கலைஞர்களுக்கு  இவ்விருது பரிந்துரைக்கப்பட்டு, இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும். கோல்டன் க்ளோப் விருதின் 77-ஆவது ஆண்டான 2019-ஆம் ஆண்டு வெளிந்த படங்களில் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் :

சிறந்தத் திரைப்படம் – ட்ராமா : 1917
சிறந்த நடிகை – ட்ராமா : ஜூடி படத்தில் நடித்த ரெனீ ஜெல்வெகேர் (ஜூடி)
சிறந்த நடிகர் – ட்ராமா : ஜோக்கர் படத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ்
சிறந்த படம் – மியூசிக்கல் அல்லது நகைச்சுவை  : ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்
சிறந்த நடிகர் – மியூசிக்கல் அல்லது நகைச்சுவை : தரேன் ஏஜர்டான் (ராக்கெட் மேன்)
சிறந்த நடிகை – மியூசிக்கல் அல்லது நகைச்சுவை : அக்வாபினா (தி பாரவெல்)
சிறந்த குணச்சித்திர நடிகர் – மியூசிக்கல் அல்லது நகைச்சுவை : பிராட் பிட் (ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்)
சிறந்த இசை – ஹில்டுர் (ஜோக்கர்)
சிறந்தத் தொலைகாட்சி சீரிஸ் – செர்நோபில்
சிறந்தத் தொலைகாட்சி சீரிஸ் நடிகை – மைக்கல் வில்லியம்ஸ் (போஸ்)
சிறந்த இயக்குனர் – சாம் மெண்டிஸ் (1917)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com