ஜல்லிக்கட்டுக்கும் குடியுரிமை சட்டத்துக்கும் போராடுபவர்கள் மாணவர்கள் தான்: நடிகர் கார்த்தி பாராட்டு

ஈரோடு பக்கத்தில் குழந்தைகள் பிறப்பதே ஆச்சர்யமாகிவிட்டது என்கிறார்கள். அந்தளவுக்குக் கருத்தரிப்பு மையங்கள்...
ஜல்லிக்கட்டுக்கும் குடியுரிமை சட்டத்துக்கும் போராடுபவர்கள் மாணவர்கள் தான்: நடிகர் கார்த்தி பாராட்டு

ஈரோடு மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் காலிங்கராயன் வாய்காலை அமைத்த காலிங்கராயனைப் போற்றும் விதமாக காலிங்கராயன் தின விழா நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பேசியதாவது: 

ஒரு தனி மனிதனாக ஊர் நன்றாக இருக்கவேண்டும் என எண்ணியிருக்கிறார் காலிங்கராயன். 738 வருடங்களுக்கு முன்பு ஒரு தனி மனிதனாக, வசதி வாய்ப்பு இல்லாதபோது இந்த வாய்க்காலை அமைத்துள்ளார். 

ஆரோக்கியத்தைத் தாண்டி சொத்து எதுவும் கிடையாது. ஈரோடு பக்கத்தில் குழந்தைகள் பிறப்பதே ஆச்சர்யமாகிவிட்டது என்கிறார்கள். அந்தளவுக்குக் கருத்தரிப்பு மையங்கள், மருந்தகங்கள். எதனால் இப்படி ஆனது? தண்ணீர் கெட்டுப் போனதால் தான். நிறைய பணம் சம்பாதித்து ஒன்றும் செய்யப்போவதில்லை. ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் அவ்வளவுதான். அடுத்தவர்களின் ஆரோக்கியத்தைப் பாழடிப்பது அதைவிடக் கொடுமை. ஆற்றில் கலக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு ஃபேக்டரிக்கும் கடிதம் எழுதுவோம்.  பொருட்செலவு செய்து அவர்கள் அதைச் சரி செய்யட்டும். அடுத்த தலைமுறை செய்வார்கள் என நினைக்கிறேன். 

விவசாயி என்றாலே வயதானவர்கள் என்றுதான் ஆகிவிட்டது. அப்படி இருக்கவே கூடாது. இனி விவாசயத்தை நாம் தான் பாதுகாக்கவேண்டும். என் பெண்ணுக்கு முளைப்பாரி என்றால் என்னவென்றே தெரியாது. இன்று அவளை ஆற்றில் விளையாட விட்டபோது அவ்வளவு சந்தோஷம். இதை அவள் வாழ்க்கை முழுக்க இதை ஞாபகம் வைத்திருப்பாள். பொங்கல் சமயத்தில் நான் ஊருக்கு வருவதற்குக் காரணம், இந்தப் பழக்கத்தை விட்டு விடக் கூடாது என்பதற்குத்தான். எவ்வளவு சம்பாதித்தாலும் விவசாயத்தை விட்டுவிடக் கூடாது என்பதற்காக சென்னைக்கு அருகிலேயே விவசாயம் செய்ய இடம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 

இனிமேல் இளைஞர்கள் தான் இறங்கி வேலை செய்யவேண்டும். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது யார் என்று பார்த்தால் கல்லூரி இளைஞர்கள் தாம். சிஏஏக்குப் (குடியுரிமை திருத்தச் சட்டம்) போராடிக்கொண்டிருப்பதும் நம் கல்லூரி மாணவர்கள் தாம். அடுத்தத் தலைமுறை தான் விவசாயத்தையும் தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ள விடியோ:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com