சசிகுமார் நடித்துள்ள நாடோடிகள் 2 பட டிரெய்லர்!

நாடோடிகள் 2 படம் அடுத்த வாரம், ஜனவரி 31 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சசிகுமார் நடித்துள்ள நாடோடிகள் 2 பட டிரெய்லர்!

2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் "நாடோடிகள்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன. இதையடுத்து நாடோடிகள் 2 படம் தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு 2018 மார்ச் மாதம் தொடங்கியது.

முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்துள்ளது. சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் - ஏகாம்பரம், கலை இயக்குநர் - ஜாக்கி, படத்தொகுப்பு - ஏ.எல்.ரமேஷ். இயக்கம் - சமுத்திரக்கனி. நாடோடிகள் 2 படப்பிடிப்பு 2018-ல் நிறைவுபெற்றது. 

இந்நிலையில் நாடோடிகள் 2 படம் அடுத்த வாரம், ஜனவரி 31 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டிரெய்லரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com