ரஜினியின் தர்பார் படத்தால் 30% நஷ்டம்: விநியோகஸ்தர்கள் தரப்பு பதில்

தர்பார் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை ஈட்டவில்லையென்பதால் ரஜினியிடம் நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளார்கள்...
ரஜினியின் தர்பார் படத்தால் 30% நஷ்டம்: விநியோகஸ்தர்கள் தரப்பு பதில்

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. முதல் நான்கு நாள்களில் தர்பார் படம் ரூ. 150 கோடி வசூலித்ததாக லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டது. 

ஆனால், தர்பார் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை ஈட்டவில்லையென்பதால் ரஜினியிடம் நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளார்கள் விநியோகஸ்தர்கள். தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடு கட்டும் விதமாக இழப்பீட்டுத் தொகையை ரஜினி பெற்றுத் தரவேண்டும் என்று எட்டு மாவட்டங்களின் விநியோகஸ்தர்கள் சென்னையிலுள்ள ரஜினியின் இல்லத்துக்கு நேற்று நேரில் சென்றார்கள். எனினும், விநியோகஸ்தர்களை ரஜினி இன்று சந்திப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள செங்கல்பட்டு விநியோகஸ்தர் காளியப்பன், தர்பார் படத்தால் தங்களுக்கு 30% நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். அவர் அப்பேட்டியில் கூறியதாவது:

தர்பார் படத்தால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து அனைத்து விநியோகஸ்தர்களும் ஒன்று கூடிப் பேசி ஒரு முடிவை எடுப்போம். நாங்கள் லைகா நிறுவனத்திடம் சென்று முறையிட்டோம். ஆனால், தங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறினார்கள். தர்பார் படம் வசூலில் தோல்வியடைந்துள்ளதால் நாங்கள் அவதிப்படுகிறோம். படத்துக்காக முதலீடு செய்ததில் 30% நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று பேட்டியளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com