கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்: சிம்ரன் திடீரென்று சொன்னது ஏன்?

இவர்களுடன் தமிழில் என் பயணத்தை ஆரம்பித்தது அதிர்ஷ்டம் எனச் சொல்வேன் என்று ஆங்கிலத்தில் பதிவு எழுதிய சிம்ரன்...
கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்: சிம்ரன் திடீரென்று சொன்னது ஏன்?

ஜூலை 4-ம் தேதியை சிம்ரனால் மறக்க முடியாது.

தமிழ்த் திரையுலகில் இந்த நாளில்தான் அவர் அறிமுகமானார். சிம்ரன் நடித்த ஒன்ஸ் மோர், விஐபி என இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகின. அன்று ஆரம்பித்தது சிம்ரனின் வெற்றிகரமான பயணம்.

சிவாஜி கணேசனுடன் இணைந்து ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தது பற்றி சிம்ரன் கூறியதாவது:

சிவாஜி கணேசன் சாருடன் இணைந்து நடித்த நினைவுகள் 23 வருடங்கள் கழிந்த பிறகும் தெளிவாக உள்ளன. கனவு நிறைவேறிய தருணம் அது. அவருடைய வாழ்த்தும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டதும் தான் என்னை உருவாக்கியது என நினைக்கிறேன். 

நண்பன் விஜய், பிரபு தேவா, ரம்பா, அப்பாஸ்... இவர்களுடன் தமிழில் என் பயணத்தை ஆரம்பித்தது அதிர்ஷ்டம் எனச் சொல்வேன் என்று ஆங்கிலத்தில் பதிவு எழுதிய சிம்ரன், என் கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன் என்கிற வாக்கியத்தைத் தமிழில் எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com