இணையத் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களுக்கு வனிதா விஜயகுமார் எச்சரிக்கை

மன அழுத்தத்தினாலும் விரக்தியினாலும் என்னையே நான் துன்புறுத்திக்கொள்ள நேரிட்டால் பிறகு நீங்கள் அனைவரும்...
இணையத் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களுக்கு வனிதா விஜயகுமார் எச்சரிக்கை

மன அழுத்தத்தினாலும் விரக்தியினாலும் என்னையே நான் துன்புறுத்திக்கொள்ள நேரிட்டால் பிறகு நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள் என்று நடிகை வனிதா விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாா் கடந்த மாதம் பீட்டா் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். அவரது மனைவி, தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக பீட்டா் பால் மீது வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உடனே புகாா் அளித்தாா். 

இதையடுத்து வனிதா விஜயகுமாரும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும் பேட்டிகளில் ஒருவரையொருவர் விமரிசித்துக்கொண்டார்கள். வனிதா விஜய்குமாரின் திருமணத்தை எதிர்த்து திரையுலகினரைச் சேர்ந்த சிலரும் பேட்டி கொடுத்தார்கள். சமூகவலைத்தளங்களில் வனிதாவின் நடவடிக்கைகளைப் பலரும் விமரிசித்துள்ளார்கள். இதனால், சமூக ஊடகங்களில், தன்னைப் பற்றி அவதூறு தகவல் வெளியிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல நடிகை வனிதா விஜயகுமாா் சென்னை போரூா் எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தன்னைப் பற்றி சிலர் தொடர்ந்து மோசமான கருத்துகளை வெளியிடுவது குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் வனிதா விஜயகுமார். அதில் அவர் கூறியதாவது:

என்ன நடந்தது என்று தெரியாமல் என்னைக் குறி வைப்பதில் சந்தோஷமடைபவர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு மனிதரைத் துன்புறுத்தி மோசமான கருத்துக்களைத் தெரிவிப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல். இணையத் துன்புறுத்தல் என்பது விளையாட்டல்ல. ஒருவருடைய வாழ்க்கையை வீழ்த்திவிடக்கூடியது. நீங்கள் எனக்குச் செய்ய இருப்பதை உண்மையாக எடுத்துக்கொண்டால் மன அழுத்தத்தினாலும் விரக்தியினாலும் என்னையே நான் துன்புறுத்திக்கொள்ள நேரிடும். நான் அப்படிச் செய்தால் நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள். எனவே இதை மற்றவர்களுக்குச் செய்யும் முன்பு யோசியுங்கள். 

நான் உண்மையிலேயே தவறு செய்திருந்தால் சட்டம் என்னைச் சும்மா விடாது. கடவுள் கவனித்துக்கொண்டிருக்கிறார் என நம்புகிறேன். கடவுளுக்கும் என் மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதுமானது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் எழுதும் இவ்வளவு குப்பைகளும் நான் யார் என்று சொல்லாது. பதிலாக, நீங்கள் யார் என்றுதான் சொல்லும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com