ஷாந்தனு இயக்கிய குறும்படத்தைப் பாராட்டிய விஜய்

டீசரில் உள்ள உணர்வுபூர்வமான விஷயங்கள் அவருக்குப் பிடித்திருந்தன...
ஷாந்தனு இயக்கிய குறும்படத்தைப் பாராட்டிய விஜய்

வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் பெண்களின் பாரத்தைக் குறைக்க ஆண்கள் முயற்சி செய்யவேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தும் குறும்படம் ஒன்றை இயக்கினார் ஷாந்தனு பாக்யராஜ்.

மனைவி கிக்கி விஜய்யுடன் இணைந்து நடித்து, கொஞ்சம் கரோனா நிறைய காதல் என்கிற குறும்படத்தை இயக்கி, அதைச் சமீபத்தில் வெளியிட்டார் ஷாந்தனு பாக்யராஜ். கரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே இந்தக் குறும்படத்தை உருவாக்கியுள்ளார். இயக்குநராக என்னுடைய முதல் முயற்சி. தொழில்முறை உபகரணங்கள் இன்றி ஐபோனில் மட்டுமே படமாக்கப்பட்ட படம் இது என்று கூறினார். ஷாந்தனுவின் இந்தக் குறும்படத்துக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் தான் இயக்கிய குறும்படத்தை நடிகர் விஜய் பாராட்டியதாக ஷாந்தனு கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

முதல் டீசரை அவருக்கு அனுப்பினேன். அட்ரா... அட்ரா... ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு எனப் பதில் கொடுத்திருந்தார். டீசரில் உள்ள உணர்வுபூர்வமான விஷயங்கள் அவருக்குப் பிடித்திருந்தன. மிகவும் ஜாலியாகப் பதில் கொடுத்திருந்தது எனக்குப் பிடித்தது. குறும்படத்தைப் பார்த்தும் பாராட்டினார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com