இரு நாள்களில் திருமணமா?: நடிகை ஹன்சிகா பதில்

தனக்கு இரு நாள்களில் திருமணம் நடைபெறவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு நடிகை ஹன்சிகா பதில் அளித்துள்ளார்.
இரு நாள்களில் திருமணமா?: நடிகை ஹன்சிகா பதில்

தனக்கு இரு நாள்களில் திருமணம் நடைபெறவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு நடிகை ஹன்சிகா பதில் அளித்துள்ளார்.

2011-ல் மாப்பிள்ளை படம் மூலமாகத் தமிழில் அறிமுகமானார் ஹன்சிகா. ஆரம்பத்தில் ஹிந்திப் படங்களில் மட்டும் நடித்து வந்த ஹன்சிகா, 2010-க்குப் பிறகு அதிகமாக தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு அடுத்தச் சில நாள்களில் தொழிலதிபருடன் திருமணம் நடைபெறவுள்ளதாகச் செய்தி ஒன்று வெளியானது. இதனால் சமூகவலைத்தளங்களில் பலரும் ஹன்சிகாவிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்குப் பதில் அளித்த ஹன்சிகா கூறியதாவது:

அபத்தம். கடவுளே, யார் அந்த மாப்பிள்ளை என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரசிகர் ஒருவர் ஹன்சிகாவிடம், ஓ மை கடவுளே, என்னிடம் ஏன் நீங்கள் இதுவரை தெரிவிக்கவில்லை என்றதற்கு, ஏனெனில் எனக்கும் இப்போதுதான் தெரியும் என வேடிக்கையாகப் பதில் அளித்துள்ளார் ஹன்சிகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com