இரு பெரிய பாலிவுட் படங்கள் ஓடிடியில் வெளியாகாது: அதிகாரபூர்வ அறிவிப்பு

பெரிய பாலிவுட் படங்களான சூர்யவன்சி மற்றும் 83 ஆகிய இரு படங்களும் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு பெரிய பாலிவுட் படங்கள் ஓடிடியில் வெளியாகாது: அதிகாரபூர்வ அறிவிப்பு

பெரிய பாலிவுட் படங்களான சூர்யவன்சி மற்றும் 83 ஆகிய இரு படங்களும் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1983-ம் ஆண்டு கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை ‘83’ என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. கபீா்கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீா் சிங் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். 83-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் கதாபாத்திரங்களிலும் பொருத்தமானவா்களைத் தோ்வு செய்து நடிக்க வைத்துள்ளனா். இந்திய கிரிக்கெட் ரசிகா்கள் மத்தியில் இந்தப் படம் பெரிதும் எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏப்ரல் 10-ம் தேதி வெளியாவதாக இருந்த இந்தப் படத்தின் வெளியீடு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சிம்பா என்கிற சூப்பர் ஹிட் படத்துக்கு அக்‌ஷய் குமார் நடிப்பில் சூர்யவன்சி என்கிற படத்தை இயக்கியுள்ளார் பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கரண் ஜோஹர் இணைத் தயாரிப்பாளராக உள்ளார். கத்ரினா கயிப், ஜாக்கி ஷெராப் போன்றோர் நடித்துள்ளார்கள். அஜய் தேவ்கனும் ரன்வீர் சிங்கும் கெளரவ வேடங்களில் நடித்துள்ளார்கள். 

இந்த இரு படங்களும் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும், ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகாது என பிவிஆர் நிறுவனம் அறிவித்துள்ளது.

சூர்யவன்சி படம் தீபாவளி அன்றும் 83 படம் கிறிஸ்துமஸ் தினத்தன்றும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் உள்பட ஏழு ஹிந்திப் படங்கள் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என நேற்று தகவல் வெளியான நிலையில் இந்த இரு பெரிய படங்கள் பற்றிய வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com