மீண்டும் ஒளிபரப்பாகவுள்ள சக்திமான் தொடர்!

90களில் குழந்தைகளை மிகவும் ஈர்த்த சக்திமான் தொடரை மீண்டும் ஒளிபரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மீண்டும் ஒளிபரப்பாகவுள்ள சக்திமான் தொடர்!

பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இதிகாச காவியங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகிய தொலைக்காட்சித் தொடா்களை தூா்தா்ஷன் மீண்டும் ஒளிபரப்பி வருகிறது. இதைத் தொடர்ந்து 90களில் குழந்தைகளை மிகவும் ஈர்த்த சக்திமான் தொடரை மீண்டும் ஒளிபரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சக்திமானாக நடித்த முகேஷ் கன்னா இத்தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷனில் சக்திமான் தொடரைக் காண 130 கோடி மக்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதிகாரபூர்வத் தகவல்களுக்குக் காத்திருங்கள் என்று கூறியுள்ளார். ஏப்ரல் 1 முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் பிற்பகல் 1 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

கரோனா தொற்று காரணமாக 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ராமானந்த் சாகா் இயக்கிய ராமாயணத் தொடரையும், பி.ஆா்.சோப்ரா இயக்கிய மகாபாரதத் தொடரையும் தூா்தா்ஷனில் ஒளிபரப்ப வேண்டும் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக பலா் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, அந்த தொடா்கள் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ராமாயணம் தொடா், மாா்ச் 28-ஆம் தேதி முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு பகுதியும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மகாபாரதம் தொடா், டிடி பாரதி தொலைக்காட்சியில் மாா்ச் 28-ஆம் தேதி முதல் தினமும் நண்பகல் 12 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ராமாயணம் தொடா், முதன் முதலில் தூா்தா்ஷனில் கடந்த 1987-ஆம் ஆண்டிலும், மகாபாரதம் தொடா் கடந்த 1988-ஆம் ஆண்டிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சக்திமான் தொடர் டிடி1 தொலைக்காட்சியில் 1997 முதல் 2005 வரை ஒளிபரப்பானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com