‘ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்' இணையத் தொடருக்குப் பலத்த வரவேற்பு: தயாராகவுள்ள மூன்றாம் பாகம்

‘ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்' இணையத் தொடருக்குப் பலத்த வரவேற்பு: தயாராகவுள்ள மூன்றாம் பாகம்

இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட இணையத் தொடராக மாறியுள்ளது.

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்' இணையத் தொடருக்குப் பலத்த வரவேற்பு கிடைத்ததையடுத்து மூன்றாம் பாகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சயானி குப்தா, கீர்த்தி குல்ஹரி, பானி ஜே, மான்வி கக்ரூ நடிப்பில் நுபுர் அஸ்தனா இயக்கிய ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் இணையத் தொடரின் 2-ம் பாகம் அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியானது. இதற்குக் கிடைத்த வரவேற்பு பற்றி அமேசான் ஒரிஜினல்ஸ் தலைமை அதிகாரி அபர்ணா புரோஹித் கூறியதாவது:

ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் இணையத் தொடருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு மகத்தானதாக உள்ளது. இந்த வருடம் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட இணையத் தொடராக மாறியுள்ளது. இந்தியாவில் அமேஸான் தொடர்களில் அதிகம் பார்க்கப்பட்ட 3-வது தொடர் என்கிற பெருமையை முதல் பாகம் கடந்த வருடம் பெற்றது. 2-ம் பாகமும் தற்போது மற்றொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் தொடரின் தயாரிப்பாளர் பிரிட்டிஷ் நந்தி கூறியதாவது:

இரு பாகங்களையும் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பார்த்து அதிக வரவேற்பை அளித்துள்ளார்கள். இதனால் அமேசானில் ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் தொடரின் மூன்றாம் பாகம் விரைவில் வெளிவரும் என அறிவிக்கிறோம். 2-ம் பாகத்தின் கதையின் தொடர்ச்சியாக நான்கு பெண்களின் வாழ்க்கையை மேலும் விவரிக்கும் விதமாக 3-ம் பாகம் அமையும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com