மனைவியே தயாரிப்பாளராக இருப்பதால் கிடைக்கும் பலன்: விராட் கோலி

தன் மனைவி அனுஷ்கா சர்மா தயாரித்துள்ள இணையத் தொடருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார் விராட் கோலி.
மனைவியே தயாரிப்பாளராக இருப்பதால் கிடைக்கும் பலன்: விராட் கோலி

தன் மனைவி அனுஷ்கா சர்மா தயாரித்துள்ள இணையத் தொடருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார் விராட் கோலி.

நடிகை அனுஷ்கா சர்மாவின் கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ், பாதல் லாக் (Paatal Lok) என்கிற இணையத் தொடர் ஒன்றை தயாரித்துள்ளது. எனினும் இத்தொடரில் அனுஷ்கா நடிக்கவில்லை.

சுதிர் சர்மா உருவாக்கியுள்ள இத்தொடரில் ஜெய்தீப் அக்லாவத், நீரஜ் கபி, குல் பனங், ஸ்வஸ்திகா முகர்ஜி போன்றோர் நடித்துள்ளார்கள்.

குற்றவியல் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

பாதல் லாக் இணையத் தொடர் வெளியாகும் முன்பே அதைப் பார்த்துவிட்டதாகக் கூறியுள்ளார் கோலி. இன்ஸ்டகிராமில் அவர் தெரிவித்ததாவது:

பாதல் லாக் தொடரை முன்பே பார்த்துவிட்டேன். அப்போதே தெரியும், கதை, திரைக்கதை, நடிப்பு போன்றவற்றில் மிகச் சிறப்பாக உள்ளது என்று. இப்போது மக்களின் விமர்சனங்களைப் பார்க்கும்போது நான் பார்த்த விதத்தை அது உறுதிப்படுத்துகிறது. இந்தத் தொடரைத் தயாரித்ததற்காக என் மனைவிக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.

ட்விட்டரில் கோலி கூறியதாவது: மனைவியே தயாரிப்பாளராக இருப்பதால் கிடைக்கும் பலன்களில் ஒன்று, இணையத் தொடரை முன்பே பார்க்கக் கிடைக்கும் வாய்ப்பு தான். எனக்கு மிகவும் பிடித்தது. குழுவினருக்குப் பாராட்டுகள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com