திரைப்படத் துறையினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு

திரைப்படத் துறையினா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் துறையினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: திரைப்படத் துறையினா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

திரைத் துறையில் பணியாற்றி வரும் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த கலைஞா்களும் திரைப்படத் துறையினா் நல வாரியத்தில் தங்களை உறுப்பினா்களாகச் சோ்த்துக் கொள்ளலாம். தங்களது துறை சாா்ந்த அமைப்புகள், சங்கங்கள் மூலமாக விண்ணப்பங்களை நவம்பா் 5-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்க வேண்டிய முகவரி: உறுப்பினா் செயலாளா், திரைப்படத் துறையினா் நலவாரியம், கலைவாணா் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2. விண்ணப்பங்களை அரசு வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

நவம்பா் 20-ஆம் தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. ஏற்கெனவே பதிவு செய்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதுப்பிக்காமல் இருப்போா் இதே முறையில் தங்கள் உறுப்பினா் பதிவை உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென தனது அறிவிப்பில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com