எஸ்.ஏ.சி. கட்சியின் தலைவர் ராஜிநாமா

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் பத்மநாபன்...
எஸ்.ஏ.சி. கட்சியின் தலைவர் ராஜிநாமா

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே. ராஜா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

விஜய் மக்கள் இயக்கத்தின் நிா்வாகத்தை நடிகா் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகா் (எஸ்.ஏ.சி.) கவனித்து வந்தாா். அவா் அவ்வப்போது பல மாவட்டங்களுக்குச் சென்று விஜய் மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தாா்.

இந்தச் சூழ்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம் தலைமை தோ்தல் ஆணையத்தில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியாக அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகா் பதிவு செய்துள்ளாா். கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகா், பொருளாளராக விஜய்யின் தாயாா் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது, தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று விஜய் தெரிவித்திருந்தாா். பிறகு, ஷோபாவும் எஸ்.ஏ.சி. கட்சியிலிருந்தும் பொருளாளா் பொறுப்பில் இருந்தும் விலகினார். 

விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் சிலருடன் நடிகர் விஜய் கடந்த வாரம் ஆலோசனை செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சிக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்சி விஷயத்தில் விஜய்க்கும் எஸ்.ஏ.சி.க்கும் கருத்துவேறுபாடுகள் தோன்றியுள்ள நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே. ராஜா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதுதொடர்பாக எஸ்.ஏ.சிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com