பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஆதிபுருஷ், 2022 ஆகஸ்ட் 11-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இயக்குநர் ஓம் ராவுத் - பிரபாஸ் (படம் - twitter.com/omraut)
இயக்குநர் ஓம் ராவுத் - பிரபாஸ் (படம் - twitter.com/omraut)

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதற்கு அடுத்ததாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது பிரபாஸின் 21-வது படம். பிரபல நட்சத்திரம் தீபிகா படுகோனுடன் இணைந்து முதல்முறையாக நடிக்கவுள்ளார் பிரபாஸ். தீபிகா படுகோன் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது. இப்படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்.

இதுதவிர, தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ். ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜனவரி 2021-ல் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ஆதிபுருஷ், 2022 ஆகஸ்ட் 11-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com