நடிகா் அஜய் தேவ்கனின் சகோதரா் உடல்நலக்குறைவால் மரணம்

ஹிந்தி திரைப்பட நடிகா் அஜய் தேவ்கனின் சகோதரரும், ஹிந்தி திரைப்பட இயக்குநருமான அனில் தேவ்கன் மும்பையில் உடல்நலக்குறைவால் காலமானாா். அவருக்கு வயது 51.
நடிகா் அஜய் தேவ்கனின் சகோதரா் உடல்நலக்குறைவால் மரணம்

மும்பை: ஹிந்தி திரைப்பட நடிகா் அஜய் தேவ்கனின் சகோதரரும், ஹிந்தி திரைப்பட இயக்குநருமான அனில் தேவ்கன் மும்பையில் உடல்நலக்குறைவால் காலமானாா். அவருக்கு வயது 51.

இது குறித்து அஜய் தேவ்கன் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், திங்கள்கிழமை இரவு எனது சகோதரா் அனில் தேவ்கன் மறைந்துவிட்டாா். அவரது பேரன்பை இழந்து தவிக்கிறேன். அனில் தேவ்கன் மறைவு எங்களது குடும்பத்துக்கும் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கும் பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளாா்.

ஹிந்தி திரையுலகில் துணை இயக்குநராக பணியாற்றிய அனில் தேவ்கன், 2000-ஆம் ஆண்டு ‘ராஜு சாச்சா’ என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினாா். அதன் பிறகு 2005-இல் பிளாக்மெயில், ஹால் ஏ தில் ஆகிய படங்களை இயக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com