பிக் பாஸ்: இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் யார்?

இந்த வாரம் வெளியேறவுள்ளவர்களின் பட்டியலில் ஆஜீத், ஆரி, அனிதா சம்பத், பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி என ஐந்து பேர் உள்ளார்கள்.
பிக் பாஸ்: இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் யார்?

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. 

முதல் நாளில் ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்தார்கள். கடந்த வாரம் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா புதிய போட்டியாளராக நுழைந்தார். 

கடந்த வாரம், வெளியேறுபவர்களின் பட்டியலில் ரம்யா பாண்டியன், ஆஜீத், கேப்ரியல்லா, ரேகா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன் என ஏழு பேர் இருந்தார்கள். அவர்களில் மக்களின் குறைவான வாக்குகள் நடிகைகள் ரேகா, சனம் ஷெட்டிக்குக் கிடைத்தன. மிகவும் குறைந்த வாக்குகளைப் பெற்ற மூத்த நடிகை ரேகா, இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வாரம் வெளியேறவுள்ளவர்களின் பட்டியலில் ஆஜீத், ஆரி, அனிதா சம்பத், பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி என ஐந்து பேர் உள்ளார்கள். சக போட்டியாளர்கள் இவர்களைத் தேர்வு செய்துள்ளார்கள். இவர்களில் குறைவாக வாக்கு பெறுபவர் ரேகா போல போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார். ஒருவேளை, ஆஜித்துக்குக் குறைவான வாக்குகள் கிடைத்தால் அவரால் தன்னிடமுள்ள பரிசைக் கொண்டு தப்பிக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com