நடிகா் திலீப்குமாரின் மற்றொரு சகோதரரும் கரோனாவுக்கு பலி

பாலிவுட் நடிகா் திலீப்குமாரின் இளைய சகோதரா் இஷான் கான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவு காலமானாா். அவருக்கு வயது 90.


மும்பை: பாலிவுட் நடிகா் திலீப்குமாரின் இளைய சகோதரா் இஷான் கான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவு காலமானாா். அவருக்கு வயது 90.

திலீப்குமாரின் இளைய சகோதரா் ஒருவா் ஏற்கெனவே கரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது மற்றொரு சகோதரரான இஷான் கானும் அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தாா்.

திலீப் குமாரின் சகோதரா்களான இஷான் கான், அஸ்லாம் கான் ஆகிய இருவருக்குமே கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இருவருக்குமே கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அஸ்லாம் கான் (88) கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி காலமானாா்.

தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொரு சகோதரா் இஷான் கான் புதன்கிழமை நள்ளிரவு காலமானதாக அவருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவா் தெரிவித்தாா். இதை திலீப்குமாரின் குடும்ப நண்பரான பைசல் ஃபரூக்கியும் தனது சுட்டுரைப் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளாா்.

முன்னதாக, கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக திலீப்குமாரும் (வயது 97), தனது மனைவி சாய்ரா பானுவும் (வயது76) தங்களை முற்றிலும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கடந்த மாா்ச் மாதமே நடிகா் திலீப் குமாா் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com