என் தாய்மொழி தெலுங்கு: லிடியன் நாதஸ்வரம்

இசைத் துறையில் இளம் வயதில் சாதித்து வரும் லிடியன் நாதஸ்வரம், ஹிந்திப் படமொன்றில் நடித்துள்ளார்.
என் தாய்மொழி தெலுங்கு: லிடியன் நாதஸ்வரம்

இசைத் துறையில் இளம் வயதில் சாதித்து வரும் லிடியன் நாதஸ்வரம், ஹிந்திப் படமொன்றில் நடித்துள்ளார்.

சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பியானோ திறமையை வெளிப்படுத்தி உலகளவில் கவனம் ஈர்த்தார் சென்னையைச் சேர்ந்த 13 வயது லிடியன் நாதஸ்வரம். அந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் லிடியன் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 6 கோடியே 96 லட்சம் பரிசுத்தொகையை வென்றார்.

2 வயது முதல் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிய லிடியன், தற்போது மொசார்ட், பீதோவன் ஆகியோரின் இசைக்குறிப்புகளை பியானோவில்  நன்கு வாசிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரால் தற்போது 14 இசைக்கருவிகளை வாசிக்கமுடியும். பல  நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்தச் சிறுவயதில் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். நேரடியாகப் பள்ளிக்குச் செல்லாமல் 1-ம் வகுப்பு முதல் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வி கற்று வருகிறார். இவருடைய அக்கா அமிர்த் வர்ஷினியும் இசைக்கலைஞர். அவரும் பள்ளிக்குச் செல்லாமல் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வியைப் பயின்று வருகிறார். லிடியனின் தந்தை வர்ஷன் சதீஷ் இசையமைப்பாளராக உள்ளார்.

இசையமைப்பாளராகவும் ஆகியுள்ளார் லிடியன். பிரபல மலையாள நடிகர் மோகன் லால் இயக்கும் Barroz என்கிற 3டி படத்துக்கு இசையமைக்கிறார் லிடியன்.

அடுத்ததாக அத்கன் சத்கன் (Atkan Chatkan) என்கிற ஹிந்திப் படமொன்றில் நடித்துள்ளார். அதுபற்றி லிடியன் கூறியதாவது:

ஏ.ஆர். ரஹ்மான் அங்கிள் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். எனக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். நான் நடித்த படத்தை அவர் பார்த்தார். பிறகு இந்தப் படத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்றார். அவருடைய இசைக் கல்லூரியில் எனக்காகப் பாராட்டு விழா நடத்தினார். 

ஹிந்தி என் தாய்மொழி கிடையாது. தெலுங்கு என் தாய்மொழி. எனவே ஹிந்தி பேசி நடிப்பது சவாலாக இருந்தது. ஆனால் படக்குழுவினர் ஒரு குடும்பம் போல என்னிடம் பழகினார்கள். ஹிந்தியை எப்படிப் பேசுவது என்று கற்றுக்கொடுத்தார்கள் என்றார்.

செப்டம்பர் 5-ல் லிடியன் நடித்த அத்கன் சத்கன் படம் ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com