
படம் - facebook.com/vadivel.balaji.5
நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 42.
கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்மூலம் புகழ்பெற்றவர் வடிவேல் பாலாஜி. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியைப் பின்பற்றி நடித்ததால் அதிகக் கவனம் பெற்றார். பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி, சிகிச்சை பலனின்றி இன்று காலமாகியுள்ளார். அவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளார்கள்.
வடிவேல் பாலாஜியின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
அண்ணன் வடிவேல் பாலாஜி அவர்களது இறப்பு மாபெரும் அதிரச்சி அளிக்கிறது...அண்ணனது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...
— Bala saravanan actor (@Bala_actor) September 10, 2020