எஸ்.எஸ். ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்: அக்டோபர் 13-ல் வெளியாகிறது!

எஸ்.எஸ். ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்: அக்டோபர் 13-ல் வெளியாகிறது!

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13-ல் வெளியாகவுள்ளது. 

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13-ல் வெளியாகவுள்ளது. 

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com