ஹிந்தியில் ரீமேக் ஆகும் யு டர்ன்: கதாநாயகி யார்?

ஹிந்தியில் ஆரிஃப் கான் இயக்குகிறார். கதாநாயகியாக...
அலாயா எஃப்
அலாயா எஃப்

பிரபல கன்னடப் படமான யூ டர்ன், ஹிந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளது.

பவன் குமார் இயக்கத்தில் 2016-ல் வெளியான கன்னடப் படமான யு டர்ன், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. முதலில் மலையாளத்தில் கேர்ஃபுல் என்கிற பெயரில் ரீமேக் ஆனது. பிறகு தமிழ், தெலுங்கிலும் ரீமேக் ஆனது. மலையாளம் தவிர கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இக்கதையை பவன் குமாரே இயக்கினார். தமிழ் ரீமேக்கில் சமந்தா நடித்தார். 

இந்நிலையில் யு டர்ன் படம் ஹிந்தியிலும் உருவாகவுள்ளது. ஹிந்தியில் ஆரிஃப் கான் இயக்குகிறார். கதாநாயகியாக அலாயா எஃப் நடிக்கிறார். இவர் நடிகை பூஜா பேடியின் மகள். கடந்த வருடம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com