3,000 திரைப்படத் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5,000 நிதியுதவி அளிக்கும் பிரபல நடிகர்

திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3,000 உறுப்பினர்களுக்கு...
படம் - twitter.com/TheNameIsYash
படம் - twitter.com/TheNameIsYash

கரோனா பொது முடக்கத்தால் அவதிப்படும் கன்னடத் திரையுலகத் தொழிலாளர்கள் 3,000 பேருக்கு தலா ரூ. 5,000 என ரூ. 1.50 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளார் பிரபல நடிகர் யாஷ்.

யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடிக்கிறார்கள்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகளை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். இதையடுத்து திரைப்படத் தொழிலாளர்களுக்கு ரூ. 1.50 கோடி நிதியுதவி அளித்துள்ளார் கேஜிஎஃப் நடிகர் யாஷ். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:

கரோனா பாதிப்பால் கன்னத் திரையுலகமும் பாதிப்படைந்துள்ளது. எங்கள் திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3,000 உறுப்பினர்களுக்கு தலா 5,000 ரூபாயை அவர்களுடைய வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com