இன்ஸ்டகிராமில் தமிழில் பதிவுகள் எழுதும் இளம் நடிகை

இரு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டகிராமில் தமிழில் பதிவுகள் எழுதும் இளம் நடிகை

தர்ஷா குப்தா.

வட இந்தியப் பெயர் போல இருந்தாலும் அசல் தமிழ்ப் பெண். அம்மா தமிழ், அப்பா மலையாளம். கோவையைச் சேர்ந்தவர். 

முள்ளும் மலரும், அவளும் நானும் மின்னலே, செந்தூரப்பூவே எனத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்போது இரு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மோகன் ஜி. இயக்கியுள்ள ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அடுத்ததாக சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இன்ஸ்டகிராமில் தொடர்ந்து புகைப்படங்களைப் பதிவு செய்து வரும் தர்ஷா குப்தாவை 15 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ட்விட்டரில் 86 ஆயிரம் பேர்.

இந்நிலையில் இன்ஸ்டகிராமிலும் ட்விட்டரிலும் தமிழில் பதிவுகள் எழுதி வருகிறார் தர்ஷா குப்தா. சமூகவலைத்தளங்களில் கிட்டத்தட்ட அனைத்து நடிகைகளுமே ஆங்கிலத்தில் தான் பதிவுகள் எழுதுவார்கள். ப்ரியா பவானி சங்கர், கன்னிகா போன்ற சில நடிகைகள் மட்டும் விதிவிலக்கு. இவர்கள் வரிசையில் தர்ஷா குப்தாவும் சமீபகாலமாகத் தமிழில் பதிவுகள் எழுதி ரசிகர்கள் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com