
படம் - facebook.com/napols8
இளையராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞரான சசிதரன் காலமாகியுள்ளார்.
இளையராஜா மனைவியின் சகோதரரும் இசைக் கலைஞருமான சசிதரன், இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களுக்கு பாஸ் கிடார் வாசித்துள்ளார். இந்நிலையில் சசிதரன் நேற்று காலமாகியுள்ளார். இதையடுத்து திரை இசைக் கலைஞர்கள் பலரும் சசிதரனின் மறைவுக்குச் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இறுதிச் சடங்குகள் சென்னையில் இன்று மாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Miss you Anna