சிறந்த படத்துக்கான ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம், ஆஸ்கர் பந்தயத்தில் படிப்படியாக முன்னேறி, சிறந்த படத்துக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சிறந்த படத்துக்கான ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம், ஆஸ்கர் பந்தயத்தில் படிப்படியாக முன்னேறி, சிறந்த படத்துக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் கடந்த வருடம் தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூரரைப் போற்று, சூர்யாவின் 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்தார். இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி. திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானதால் பல்வேறு விமர்சனங்களை சூர்யா எதிர்கொண்டார். 

தற்போது, சூரரைப் போற்று திரைப்படம், ஆஸ்கா் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கா் விருது பெறுவதற்கான போட்டியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கா் போட்டியில் பங்கேற்கலாம்.

அந்த வரிசையில் பொதுப்பிரிவில் சூரரைப் போற்று படம் - சிறந்த நடிகா், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநா், சிறந்த இசையமைப்பாளா், சிறந்த கதாசிரியா் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிட்டது.

முதலில் பொதுப்பிரிவில் போட்டியிட்ட சூரரைப் போற்று படம், தற்போது 366 படங்கள் கொண்ட சிறந்த படத்துக்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சூரரைப் போற்று படம் அடுத்ததாகப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற வேண்டும். அப்பட்டியலில் இடம்பெற்றால் மட்டுமே ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாக முடியும்.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு என்கிற மலையாளப் படம் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் முதல் சுற்றிலேயே இந்தப் படம் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் ஆஸ்கர் பந்தயத்தில் படிப்படியாக முன்னேறி வரும் சூரரைப் போற்று படம் இறுதிப் பட்டியலில் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மார்ச் 15 அன்று இறுதிக்கட்டப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படும். ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா 2021 ஏப்ரல் 25 அன்று நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com