ரசிகர்கள் அதிகம் பகிரும் வலிமை பட போஸ்டர்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் முதல் தோற்ற விடியோ யூடியூப் தளத்தில் ஒரு கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
ரசிகர்கள் அதிகம் பகிரும் வலிமை பட போஸ்டர்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் முதல் தோற்ற விடியோ யூடியூப் தளத்தில் ஒரு கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த வலிமை படத்தின் முதல் தோற்ற விடியோ சமீபத்தில் வெளியானது. இந்த விடியோ சில நாள்களிலேயே யூடியூப் தளத்தில் ஒரு கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. இதனால் படக்குழு, வலிமை படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. சூப்பர் பைக்கில் அஜித் அமர்ந்து சிரிப்பது போல உள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்ந்து வருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com