மில்கா சிங் மறைவு: இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கின் மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
மில்கா சிங் மறைவு: இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கின் மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

91 வயது மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு முறை தங்கப் பதக்கங்களை வென்றவர். 400 மீ. ஓட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர். 1960 ரோம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் 400 மீ. ஓட்டத்தில் 4-ம் இடம் பிடித்து பதக்கத்தைத் தவறவிட்டார். 400 மீ. ஓட்டத்தில் குறைந்த நேரத்தில் ஓடி முடிந்த அவருடைய தேசிய சாதனை 38 வருடங்களுக்குப் பிறகே முறியடிக்கப்பட்டது. 1959-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கடந்த மாதம் மில்கா சிங், கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். கரோனா பாதிப்பு குறையாததால் மொஹலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பிறகு குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சீரான நிலைமையில் இருந்த மில்கா சிங், வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆக்சிஜன் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

ஆக்சிஜன் அளவுகள் குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் ஜூன் 3 அன்று மீண்டும் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 13 அன்று கரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. எனினும் கரோனாவுக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகளால் அவர் அவதிப்பட்டார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மில்கா சிங் காலமானார். ஆறு நாள்களுக்கு முன்பு மில்கா சிங்கின் மனைவி நிர்மல் (85), கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். 

மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு, பாக் மில்கா பாக் என்கிற ஹிந்திப் படமாக ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஃபர்கான் அக்தர் நடிப்பில் 2013-ல் வெளிவந்தது. சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. இந்தியாவில் எடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் சிறந்த படமாக இன்றைக்கும் ரசிகர்களால் போற்றப்படுகிறது.

மில்கா சிங்கின் மறைவுக்குத் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com