‘இது உங்களுக்காக விஜய்’: உடைந்த கையுடன் ‘வாத்தி கம்மிங்’ நடனமாடிய நடிகை

உடைந்த கையுடன் விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ நடிகை ஒருவர் நடனமாடிய விடியோ வைரலாகப் பரவி வருகிறது.
உடைந்த கையுடன் விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ நடிகை ஒருவர் நடனமாடிய விடியோ வைரலாகப் பரவி வருகிறது.
உடைந்த கையுடன் விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ நடிகை ஒருவர் நடனமாடிய விடியோ வைரலாகப் பரவி வருகிறது.

சென்னை: உடைந்த கையுடன் விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ நடிகை ஒருவர் நடனமாடிய விடியோ வைரலாகப் பரவி வருகிறது.

பொங்கலுக்கு விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பெரும் சாதனை படைத்தது.

அதனை எதிரொலிக்கும் விதமாக இந்தப் பாடலுக்கு பல நடிகர்கள், நடிகைகள் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர்களும் நடனம் ஆடி தங்களது சமூக வலைதள பக்கங்களில் விடியோ வெளியிட்டார்கள்.

இந்நிலையில் உடைந்த கையுடன் விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடிகை ஒருவர் நடனமாடிய விடியோ வைரலாகப் பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. இவர் விஜயுடன் சச்சின் மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்.

அவர் தற்போது விபத்து ஒன்றில் சிக்கி உடைந்து கட்டுப்போட்ட கையுடன், தனது கணவர் ரிதேஷ் தேஷ்முக் மற்றும் நண்பர்களுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும் ”இது உங்களுக்காக விஜய்... உங்கள் வெற்றியை எப்போதும் கொண்டாடுகிறோம்’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com