தமிழக அரசுக்கும் பெப்சி அமைப்புக்கும் கரோனா நிவாரண நிதி அளித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழக அரசுக்கும் பெப்சி திரைப்படத் தொழிலாளர் அமைப்புக்கும் கரோனா நிவாரண நிதியாக தலா ரூ. 1 லட்சம் அளித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.

தமிழக முதல்வரின் கரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கும் பெப்சி திரைப்படத் தொழிலாளர் அமைப்புக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகளை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். இதனால் திரைப்படப் பிரபலங்கள் நிதியுதவி செய்யவேண்டும் என்று பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com