
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வரும் விக்னேஷ் சிவன், தொடர்ந்து தனது ரௌடி பிக்சர்ஸ் சார்பாக திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'நெற்றிக்கண்' படத்தை தயாரித்திருந்த விக்னேஷ் சிவன், 'கூழாங்கல்' மற்றும் 'ராக்கி' ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதில் கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கவின் கதாநாயகானாக நடிக்கும் ஊர் குருவி படத்தை தயாரிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதே போல விநாயக் என்பவர் இயக்கும் 'வாக்கிங் டாக்கிங் ஸ்டிராபெர்ரி ஐஸ்கிரீம்' என்ற படத்தை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் 'சூரரைப் போற்று' படத்தில் சே என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த கிருஷ்ண குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரபல பாடகி ஜோனிதா காந்தி நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் தங்கை மால்தி சாஹர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதனையடுத்து அவரை இயக்குநர் விக்னேஷ் சிவன் வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.
We are sooo happy to have you on board #WalkingTalkingStrawberryIcecream #Wtsi @Rowdy_Pictures
â Vignesh Shivan (@VigneshShivN) October 28, 2021
https://t.co/w6tuRSQ6YK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




