நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு இயக்குநரும், தயாரிப்பாளர்களும் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அடுத்தப் படம் குறித்து நேற்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இந்தப் படத்தை வம்சி இயக்குகிறார். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி - நாகர்ஜூனா இணைந்து நடித்துள்ள 'தோழா' படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுனத்தின் சார்பாக, தில் ராஜூ மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தையும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'தளபதி 66' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் தில் ராஜூ, சிரிஷ், இயக்குநர் வம்சி ஆகியோர் திருப்பதி கோயிலில் சாம் திரசனம் செய்துள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் படத்தின் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இறுதிச் சடங்குகளில் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் : மஞ்சு வாரியர்

ரயிலில் தாலி திருட்டு! பயணிக்கு ரூ. 80,000 நஷ்டஈடு வழங்க ரயில்வேக்கு உத்தரவு!

அதிக கோல்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த 2026 உலகக் கோப்பை!

வியத்நாம் படகு விபத்து: வேலூர் கொண்டுவரப்பட்ட இளைஞர் உடல்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



