/

தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர் ? : பரவும் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 66 படத்தில் நானி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. 

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:10 am

DIN

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 66 படத்தில் நானி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. 

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க இயக்குநர் நெல்சன் திட்டமிருந்தார். ஆனால் கரோனா பரவல் உச்சத்தில் இருந்ததன் காரணமாக அந்த காட்சிகளை இந்தியாவிலேயே படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே சமீபத்தில் படப்பிடிப்புத் தளத்தில் கலந்துகொண்ட செய்திகள் வைரலானது. ஏற்கனவே நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் பாடல் காட்சிகள் சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் மிக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இதனையடுத்து விஜய் தில்லியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடந்து செல்லும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.  இப்படி பீஸ்ட் படம் தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. 

Story image

பீஸ்ட் படத்தில் வில்லனாக இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். அவர் ஏற்கனவே கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். விஜய் மற்றும் செல்வராகவன் இடையேயான காட்சிகளைக் காண ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்துள்ளது. 

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால், பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தளபதி 66 படம் பற்றிய செய்திகள் தான் இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் இந்தப் படத்தின் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவாதங்கள் வலுப்பெற்று வருகின்றன.

Story image

அந்த வகையில் இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நானி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் ஒன்று பரவிவருகிறது. ஆனால் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் இயக்குநர் வம்சி இயக்கத்தில் மகேஷ் பாபு மஹார்ஷி படத்தில் நடித்துள்ளதால், தளபதி 66 பட துவக்க விழாவில் மகேஷ் பாபு கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.