‘வேதநாயகம்னா பயம்’: காலமானார் பிரபல நடிகர் சலீம் கௌஸ்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த பிரபல நடிகர் சலீம் கௌஸ் காலமானார்.
சலீம் கௌஸ்
சலீம் கௌஸ்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த பிரபல நடிகர் சலீம் கௌஸ் காலமானார்.

சென்னையில் 1952 ஆம் ஆண்டு பிறந்த சலீம் அகமது கௌஸ் நாடகக் கலைஞராக நடிப்பைத் துவங்கியவர். பின், நாடக இயக்குநராகவும் செயல்பட்டு வந்தார். 

1978 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘ஸ்வர்க் நரக்’ படத்தில் மாணவனாக அறிமுகமான சலீம் 1989 ஆம் ஆண்டு  தமிழில் பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியான ’வெற்றி விழா’ படத்தில் வில்லனாக அறிமுகமானார். 

பின், ’சின்ன கவுண்டர்’ ‘திருடா திருடா’  ‘சாணக்யா’ ‘வேட்டைக்காரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, வேட்டைக்காரனில் ‘வேதநாயகம்’ என்கிற வில்லன் கதாப்பாத்திரத்தில்  நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது, 70 வயதான அவர் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com