மறுவெளியீட்டில் அசத்தும் அவதார்! வசூல் இத்தனை கோடிகளா?

புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியான அவதார் திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.
மறுவெளியீட்டில் அசத்தும் அவதார்! வசூல் இத்தனை கோடிகளா?

புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியான அவதார் திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். 

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையையும் இத்திரைப்படம் நிகழ்த்தியது. 

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து  இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  முதல் பாகத்தைப் போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இரண்டாம் பாகத்தினைப் பார்ப்பதற்கு முன் 3டி தொழில்நுட்பத்தில் 4கே (4k) தரத்தில் மீண்டும் ஒருமுறை திரையரங்குகளில் அவதார் படத்தை வெளியிட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் முடிவு செய்திருந்தார்.

அதன்படி, கடந்த 23 ஆம் தேதி  மீண்டும் திரையரங்குகளில் வெளியான இப்படம் இதுவரை உலகளவில் ரூ.350 கோடியையும் இந்தியாவில் ரூ.7 கோடியையும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com