ஆஸ்கர் அகாதெமியில் இருந்து விலகினார் வில் ஸ்மித்

ஆஸ்கர் விருது விழாவை நடத்து ஆஸ்கர் அகாதெமி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் நடிகர் வில் ஸ்மித்.
ஆஸ்கர் அகாதெமியில் இருந்து விலகினார் வில் ஸ்மித்



ஆஸ்கர் விருது விழாவை நடத்து ஆஸ்கர் அகாதெமி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் நடிகர் வில் ஸ்மித்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்கர் அமைப்புக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டேன், ஆஸ்கர் விருது விழாவில் தனது செயல் மன்னிக்க முடியாதது என வேதனையை வெளிப்படுத்தியுள்ள வில் ஸ்மித், ஹாலிவுட் அகாதெமி விருது அமைப்பில் இருந்து விலகும் முடிவை உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் வரும் 18 ஆம் தேதி வில் ஸ்மித் மீது ஒழுங்குமுறை ஆணையம் மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட இருந்து நிலையில் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார் வில் ஸ்மித். 

கடந்த 28 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற டால்பி திரையரங்கில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித்தைக் கிண்டலடித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி அறைந்தார் வில் ஸ்மித். கிங் ரிச்சர்ட் படத்தில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com