
அல்லு அர்ஜூனின் நடிப்பில் உருவாக இருக்கும் புஷ்பா -2 படத்தின் பூஜை இன்று (ஆக.22) நடைபெற்றது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது புஷ்பா 2 படத்தின் பூஜை தொடங்கியது. இதில் இயக்குநர் சுகுமார், தயாரிப்பாளர் கலந்துக்கொண்டனர். படத்தின் புஷ்பா-2 பூஜை: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா பங்கேற்கவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அல்லு அர்ஜூன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா-2வில் நடிக்க அதிக சம்பளத்தை கேட்டிருந்தாரென சமீபத்தில் தகவல் வெளியானது. அவர் இப்படத்தில் இருப்பாரா இல்லையாயென எந்த தகவலும் வெளியாகவில்லை. படப்பிடிப்பு தொடங்கியதும்தான் தெரியவரும்.
'PUSHPA' TEAM IS BACK, POOJA HELD... #AlluArjun. Director #Sukumar. Producers #MythriMovieMakers. Composer #DSP... The winning combination is back with #Pushpa2: #PushpaTheRule... Glimpses from the pooja ceremony held today... Filming begins soon. pic.twitter.com/8lnYVd4sTz
— taran adarsh (@taran_adarsh) August 22, 2022