
பிரபல நடிகரின் படத்தில் கார்த்தி பாடிய பாடலின் ப்ரமோ விடியோ வெளியாகியுள்ளது.
டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'கணம்' என்ற திரைப்படம் தெலுங்கில் 'ஒகே ஒக்க ஜீவிதம்' என்ற பெயரில் உருவாகியுள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தில் நடிகை அமலா நடித்துள்ளார். ஷர்வானந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ரித்து வர்மா நாயகியாக நடித்துள்ளார்.
ஸ்ரீகார்த்திக் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் பதிப்பில் சதிஷ், ரமேஷ் திலக், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | எப்படி இருக்கிறது அருள்நிதியின் 'டைரி' - விமர்சனம்
கணம் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி 'மாறிப்போச்சோ' என்ற பாடலைப் பாடியுள்ளார். தெலுங்கிலும் அவரே பாடியுள்ளார். இந்தப் பாடல் இன்று மாலை (ஆகஸ்ட் 26) 5 மணிக்கு வெளியாகிறது. தற்போது இந்தப் பாடலின் ப்ரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Get ready to listen #Maaripocho Full song from #Kanam at 5pm Today
— DreamWarriorPictures (@DreamWarriorpic) August 26, 2022
Sung by @Karthi_Offl
Stay Tuned to https://t.co/RzfbmhZNFp @ImSharwanand @riturv @amalaakkineni1 @actorsathish @thilak_ramesh @JxBe @madhankarky @twittshrees @prabhu_sr #KanamFromSep9 pic.twitter.com/AYFdSTPRpT