
'லைகர்' பட நடிகர் விஜய் தேவரகொண்டா இசையமைப்பாளர் யுவனுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.
பூரி ஜெந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்தப் படம் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக லைகர் வெளியாகும் முன் 'பாய்காட் லைகர்' என்ற ஹேஷ்டேக் இணையதளங்களில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. அனன்யா பாண்டே நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | எப்படி இருக்கிறது அருள்நிதியின் 'டைரி' - விமர்சனம்
தமிழ்நாட்டில் இந்தப் படத்தை ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 சார்பாக வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் லைகர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அவருக்கு தேவரகொண்டா அளித்துள்ள பதிலில், அன்புள்ள யுவன், விரைவில் நாம் இணைந்து பணியாற்றவேண்டும். உங்கள் வாழ்த்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இது இருவரது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Yuvannnnn
— Vijay Deverakonda (@TheDeverakonda) August 24, 2022
We need to collab soon
Thank you for the wishes!