அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்: மெஸ்ஸிக்கு இயக்குநர் மிஷ்கின் புகழாரம் !

ஆா்ஜென்டீனாவுக்காக உலகக் கோப்பையை பெற்று தந்த கேப்டன் மெஸ்ஸியை இயக்குநர் மிஷ்கின் புகழ்ந்துள்ளார்.
அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்: மெஸ்ஸிக்கு இயக்குநர் மிஷ்கின் புகழாரம் !

ஆா்ஜென்டீனாவுக்காக உலகக் கோப்பையை பெற்று தந்த கேப்டன் மெஸ்ஸியை இயக்குநர் மிஷ்கின் புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டும் மெஸ்ஸியின் மூலமாகப் புதிதாகப் புரிந்து கொண்டேன். மெஸ்ஸி ஆர்ஜென்டீனாவுக்கு மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தமானவர். பந்திற்கும் அவரின் காலிற்கும் இடையே பெரும் புவிஈர்ப்பு விசை இயங்குகிறது. 

சஷண நேரத்தில் நூறு முடிவுகளை அந்த மனிதரின் அசாத்திய மூளை எடுக்கிறது.  மெஸ்ஸியின் ஒவ்வொரு அசைவிலும் இசைப் பிறக்கிறது. ப்ருஸ் லீ, மைக்கேல் ஜாக்சன் போல மெஸ்ஸி நம் மனதில் விளையாடுகிறார். வான்காவைப் போல், நெருடாவைப் போல், பீத்தோவனைப் போல் மெஸ்ஸியும் ஒரு மகா கலைஞன். அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அந்த அணி 3-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த ஆட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆா்ஜென்டீனாவுக்காக லயோனல் மெஸ்ஸி, டி மரியா ஆகியோரும், பிரான்ஸுக்காக கிலியன் பாபேவும் கோல்கள் அடித்து அசத்தினாா்.

பெனால்டி ஷூட் அவுட்டில் ஆா்ஜென்டீனாவுக்காக லயோனல் மெஸ்ஸி, பௌலோ டைபாலா, லீண்ட்ரோ பரெட்ஸ், கொன்ஸாலோ மான்டியெல் ஆகியோா் கோலடித்தனா். பிரான்ஸ் தரப்பில் கிலியன் பாபே, கோலோ முவானி மட்டும் ஸ்கோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com