நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்பட வருகிற 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் பட சண்டைக் காட்சி ப்ரமோவை தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்துள்ளார்.
வினோத் இயக்கியுள்ள வலிமை திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.
இதையும் படிக்க | அஜித்தா? பவன் கல்யாணா ? வெல்லப்போவது யார்? வலுக்கும் போட்டி
மேலும் ஹுமா குரேஷி, சுமித்ரா, ராஜ் அய்யப்பா, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வலிமை திரைப்படத்தையடுத்து மூன்றாவது முறையாக நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் இணையவுள்ளனர்.