
நெடுஞ்சாலை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரி. நயன்தாராவுடன் அவர் இணைந்து நடித்த மாயா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ரசிகர்களைக் கவரவில்லை.
இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தனது இயல்பான நடவடிக்கைகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். இதன் காரணமாக பி்க்பாஸ் டைட்டில் வின்னரானார். அவர் நடிக்கும் படங்களின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இதையும் படிக்க | 'ஆர்ஆர்ஆர்'-ஐத் தொடர்ந்து மற்றொரு பெரிய படத்தின் வெளியீடும் தள்ளிவைப்பு : காரணம் என்ன ?
இந்த நிலையில் தனது புதிய படத்தை ஆரி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாக்யராஜ், அமீர், அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர் சிவி குமார், ஐசரி கே.கணேஷ் உள்ளிட்டோரின் ஆசியுடன் நான் நடிக்கும் புதிய படம் ஊட்டியில் துவங்குகிறது. இந்தப் படத்தை எஸ்ஏஎஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அஞ்சு குரியன் நடிக்கிறார். கண்மணி பட புகழ் மணிவர்மன் இயக்குகிறார்.
With the blessings of @ungalKBhagyaraj, @IshariKGanesh, @icvkumar, @directorameer, #RameshKrishnan, @DirectorS_Shiva & @Arunrajakamaraj#SASProductions ProdNo1 starring @AnjuKurian10 shoot starting today at Ooty.
— Aari Arujunan (@Aariarujunan) January 5, 2022
Directed by Kanmani fame #BManiVarman @onlynikil pic.twitter.com/Elro6j8Vbx